Home இந்தியா 2 நாட்களில் சென்னையில் மழை!- சென்னை வானிலை ஆய்வு மையம்

2 நாட்களில் சென்னையில் மழை!- சென்னை வானிலை ஆய்வு மையம்

704
0
SHARE
Ad

சென்னை: தென்மேற்கு பருவ மழை கேரளாவில் பெய்யத் தொடங்கி உள்ள காரணத்தால் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருவதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆயினும், இதர மாவட்டங்களில் வறட்சியே நீடிக்கிறது. சென்னை கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளா, கர்நாடகாவின் தென்பகுதி மற்றும், தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டுமே பெய்து வரும் மழை, மற்ற இடங்களுக்கும் பரவ, இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.