Home இந்தியா “சென்னைக்கு நெருக்கடி – இவ்வாண்டும் மழை பெய்யவில்லை என்றால், மக்கள் மடிவர்”- மக்கள்

“சென்னைக்கு நெருக்கடி – இவ்வாண்டும் மழை பெய்யவில்லை என்றால், மக்கள் மடிவர்”- மக்கள்

1478
0
SHARE
Ad

சென்னை: தென்னிந்திய நகரமான சென்னையில் அதன் நான்கு முக்கிய நீர் தேக்கங்களும் முற்றிலும் வறண்டு போனதால் நெருக்கடியில் சிக்கியுள்ளது. கடுமையான நீர் பற்றாக்குறையின் காரணமாக புதிய நீர் ஆதாரத்தை தேடும் நிலைக்கு சென்னை தள்ளப்பட்டுள்ளது.

அரசு தொட்டிகளில் இருந்து தண்ணீரைப் பெறுவதற்கு குடியிருப்பாளர்கள் மணிக்கணக்கில் வரிசையில் நிற்க வேண்டியிருப்பதாகவும், தண்ணீர் இல்லாததால் பல உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் மக்கள் கூறுகின்றனர்.

மழையால் மட்டுமே சென்னையை இந்த சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற முடியும்என்று அரசாங்க அதிகாரி பிபிசி செய்தியிடம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளது. 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் ஆறாவது பெரிய நகரமாக விளங்கும் சென்னையில், பல வாரங்களாக கடுமையான நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த நிலைமை ஒரு சில இடங்களில் குடியிருப்பாளர்களிடையே மோதல்களைத் தூண்டியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த வாரம், அக்கம் பக்கத்தில் நீர் பகிர்வு தொடர்பாக நடந்த சண்டையின் போது தனது அயலவரை கத்தியால் குத்தியதற்காக ஒருவரை காவல் துரையினர் கைது செய்துள்ளனர்.

மாற்று நீர் ஆதாரங்களைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் முயற்சித்து வருவதாகவும், நகரின் நீர் துறை குவாரிகளில் இருந்து நீரைக் கண்டறிந்து பிரித்தெடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

ஆனால், தற்போதைய பெரிய கவலையாக எழுவது உலர்ந்த நீர்த்தேக்கங்கள் மற்றும் குறைந்த நிலத்தடி நீர்மட்டங்களும் ஆகும்.

இதற்கு முன்னரும் வறண்ட ஆண்டுகள் இருந்தன, ஆனால் நிலத்தடி நீர் எங்களை மீட்டதுஎன்று சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார்.

அழிவு இப்போதுதான் தொடங்கி உள்ளது. இந்த ஆண்டும் மழை பெய்யவில்லை என்றால், நாங்கள் முற்றிலும் அழிந்து போவோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆயினும், மேட்டூர் அணையில் இருந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் கொண்டு வந்து, சென்னை குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி கூறியுள்ளதாகத் செய்தி வெளியாகியுள்ளது.