Home நாடு ஹசிக்கை கட்சியை விட்டு நீக்க வேண்டும், சுரைடா வலியுறுத்தல்!

ஹசிக்கை கட்சியை விட்டு நீக்க வேண்டும், சுரைடா வலியுறுத்தல்!

618
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலியை ஒத்த ஒரு நபருடன் ஓரினச் சேர்க்கை காணொளி சம்பந்தப்பட்ட வெளிப்படையான வாக்குமூலத்தை அளித்த ஹசிக் அப்துல்லா, கட்சியின் நற்பெயரை களங்கப்படுத்தியதன் பேரில் அவரை உடனே கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்று இன்று புதன்கிழமை நடைபெற உள்ள பிகேஆர் பணியக சந்திப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்போவதாக வீட்டுவசதி மற்றும் நகராட்சிமன்ற அமைச்சர் சுரைடா காமாருடின் கூறினார்.

ஓரினச் சேர்க்கை காணொளி குறித்த ஹசிக்கின் வாக்குமூலமே போதுமானதாக இருக்கையில், கட்சி தலைமை இன்னும் அவரை கட்சியை விட்டு நீக்காமல் இருப்பதை சுரைடா கேள்வி எழுப்பினார்.

#TamilSchoolmychoice

ஓரினச் சேர்க்கை தொடர்பான குற்றங்கள் இந்நாட்டில் ஏற்கபடாத ஒன்று. ஒருவேளை அஸ்மின் சம்பந்தப்பட்டது உண்மையாக இருந்தால் காவல் துறையினர் அதனை விசாரித்து கூறட்டும்” என்று அவர் கூறினார்.