Home இந்தியா சென்னை – பினாங்கு இடையில் நேரடி விமான சேவை – ஸ்டாலின் மோடியிடம் கோரிக்கை

சென்னை – பினாங்கு இடையில் நேரடி விமான சேவை – ஸ்டாலின் மோடியிடம் கோரிக்கை

472
0
SHARE
Ad

சென்னை : ஜனவரி 2-ஆம் தேதி, புத்தாண்டின் தொடக்க நாளில் சென்னை வந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அந்த நிகழ்ச்சிகளில் மோடியுடன் கலந்து கொண்டார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை மோடி திறந்து வைத்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் தமிழ் நாடு அரசாங்கத்தின் சார்பாக சில கோரிக்கைகளை சமர்ப்பித்தார் ஸ்டாலின். அதில் ஒரு கோரிக்கை சென்னைக்கும் பினாங்குக்கும் இடையில் நேரடி விமான சேவை தொடங்கப்பட வேண்டும் என்பதாகும்.

தற்போது கோலாலம்பூரில் இருந்து தமிழ் நாட்டின் சென்னை, திருச்சி ஆகிய நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்படுகின்றன. மலேசியாவின் மற்ற நகர்களில் இருந்து இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு விமான சேவைகள் இல்லை. கெடா, பெர்லிஸ், பினாங்கு ஆகிய வட மாநிலங்களில் இருந்தும் பேராக் மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இருந்தும் ஏராளமான இந்தியர்கள் சென்னைக்கு பயணம் மேற்கொள்கின்றனர்.

#TamilSchoolmychoice

இவர்கள் அனைவரும் கோலாலம்பூர் வந்துதான் சென்னைக்கு விமானம் எடுக்க வேண்டும். அதே போல கோலாலம்பூரில் இறங்கித்தான் வட மலேசிய இந்தியர்கள் அதற்குப் பின்னர் தங்களின் இல்லங்களுக்குச் செல்ல வேண்டும். இதற்கான போக்குவரத்து செலவினங்களையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

இந்நிலையில் பினாங்கில் இருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்கப்பட்டால், அதன் மூலம் வட மலேசிய இந்தியர்கள் பெரும் பயனடைவார்கள்.