Home வணிகம்/தொழில் நுட்பம் மலேசியா ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நாடாக உருபெற வாய்ப்பு!

மலேசியா ஆப்பிள் நிறுவனத்தின் உற்பத்தி நாடாக உருபெற வாய்ப்பு!

825
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சீனா- அமெரிக்கா வணிகப் போரின் காரணமாக ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள், அதன் 15-30 விழுக்காடு உற்பத்தித் திறனை பிற நாடுகளுக்கு நகர்த்துவதற்கான திட்டத்தை ஆய்வு செய்து வருவதாக நிக்கி ஆசிய நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் மலேசியாவும் அடங்கும்.

சீனாவின் உற்பத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பதை தவிப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், அத்தகைய நடவடிக்கையின் தாக்கங்களை எதிர்கொள்ள முக்கிய விநியோகஸ்தர்களை ஆப்பிள் கேட்டுக் கொண்டுள்ளது.

மலேசியாவைத் தவிர்த்து, இந்தோனேசியா, மெக்ஸிகோ, இந்தியா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளும் இந்த திட்டத்தில் பரிசீலிக்கப்படுவதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

#TamilSchoolmychoice

இதற்கிடையே, சீனாவில் ஆப்பிளின் முக்கிய சந்தைப்படுத்தும் நிறுவனமான பாக்ஸ்கான் கூறுகையில், சீனாவிலிருந்து வெளியேறத் திட்டமிடுவது குறித்த கருத்தை மறுத்துள்ளது. அமெரிக்கசீனா வணிக யுத்தம் கைக்கு மீறினால், ஆப்பிள் அதற்கான திட்டத்தை வைத்திருப்பதாக புளூம்பெர்க் தெரிவித்துள்ளது.