Home One Line P2 கொவிட்-19 பாதிப்பால் ஆப்பிள் பங்குகள் 3 விழுக்காட்டிற்கும் மேல் சரிவு!

கொவிட்-19 பாதிப்பால் ஆப்பிள் பங்குகள் 3 விழுக்காட்டிற்கும் மேல் சரிவு!

757
0
SHARE
Ad

கலிபோர்னியா: நேற்று செவ்வாய்க்கிழமை ஆப்பிள் பங்குகள் மூன்று விழுக்காட்டிற்கும் மேலாக சரிந்தன. சீனாவின் செயல்பாடுகள் மற்றும் விற்பனை அறிக்கையைத் தொடர்ந்து ஆப்பிளின் பங்குகள் சரிந்துள்ளன.

இது உலகெங்கிலும் உள்ள ஆப்பிள் நிறுவனத்தின் துணை நிறுவனங்களின் பங்குகளையும் கீழே இழுத்துச் சென்றுள்ளது.

முன்னதாக, ஆப்பிளின் தொழில்நுட்ப நிறுவனம் தனது முதலீட்டாளர்களுக்கு இரண்டாவது காலாண்டில் அதன் நிதி இலக்குகளை பூர்த்தி செய்ய இயலாது என்று எச்சரித்தது.

#TamilSchoolmychoice

ஆப்பிள் நிறுவனத்தின்படி, இது சீனாவில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 பாதிப்பால், ஐபோன்களின் உற்பத்தி மற்றும் விற்பனைத் தொடர்ந்து மெதுவாக நகர்வதாகக் குறிப்பிட்டுள்ளது. மேலும், ஹூபேக்கு வெளியேயும் உற்பத்தி மெதுவாக உள்ளதாக அது தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், சீனாவில் ஆப்பிளின் 42 சில்லறை கடைகளில் பெரும்பாலானவை மூடப்பட்டுவிட்டன அல்லது குறைவாக இயங்குவதால் சீனாவில் தேவைகள் குறைந்து வருவதாகக் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடையும் காலாண்டில் தனது 63 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இலக்கை எட்ட முடியாது என்று ஆப்பிள் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு அடுத்தபடியாக ஐபோனுக்கான மூன்றாவது பெரிய சந்தையாக சீனா இருந்தபோதிலும், காலாண்டில் புதிய இலக்கு நிர்ணயிக்கப்படுமா என்று அது கூறவில்லை.

ஆனால் சீனாவுக்கு வெளியே, ஆப்பிள் ஐபோன் சந்தை இன்னும் வலுவாகவும், நிறுவனத்தின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்பவும் உள்ளது என்று அது கூறுகிறது.