மும்பையைச் சேர்ந்த 29 நடனக் கலைஞர்களைக் கொண்ட வி. அண்ட்பீட்டபள் நடனக் குழு , முதன்முதலில் 2019-ஆம் ஆண்டில் “அமெரிக்காஸ் காட் டேலண்ட்” நிகழ்ச்சியில் தோன்றியது. முன்னாள் நீதிபதி கேப்ரியல் யூனியனின் கணவர், நீதிபதி டுவயேன் வேடிடமிருந்து கோல்டன் பஸரை அக்குழு அப்போது வென்றது.
இந்த குழு கடந்த ஆண்டு நான்காவது இடத்தில் வந்தது. ஆனால் இம்முறை அனைத்து தடைகளையும் கடந்து இறுதியில் கோப்பையைத் தட்டிச் சென்றது.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த பேட்ட திரைப்படத்தில் இடம்பெற்ற “மரண மாஸ்” என்ற பாடலுக்கு அவர்கள் நடனமாடி, பார்வையாளர்களிடமிருந்தும், நீதிபதிகள், சைமன் கோவல், ஹெய்டி க்ளம், ஹோவி மண்டேல் மற்றும் அலேஷா டிக்சன் ஆகியோரிடமிருந்தும் பெரும் உற்சாகத்தைப் பெற்றனர்.
அவர்களின் அசாதாரணமான சாகசங்கள் அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியது. அதனை அடுத்து அவர்கள் பலரின் கவனத்தை ஈர்த்தனர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இறுதிப் போட்டியில் அவர்கள் முதலிடத்தை வென்றதை அறிவிக்கும் காணொளி இணைக்கப்பட்டுள்ளது: