கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தற்போது சரவாக்கில் உள்ள உயர்மட்ட நபர்களை விசாரித்து வருவதாக அதன் தலைவர் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை போர்னியோ போஸ்ட் வெளியிட்ட அறிக்கையின்படி, அவ்விசாரணைகளின் முக்கியத்துவம் குறித்து எந்தவொரு தகவல்களையும் லத்தீஃபா வெளியிடவில்லை என்று குறிப்பிட்டிருந்ததாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
கடந்த வாரம், சரவாக் மாநில எம்ஏசிசி இயக்குனர் ராசிம் முகமட் நூர் கூறுகையில், தற்போது அம்மாநிலத்தில் பல உயர்மட்ட நபர்களை விசாரித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.
கடந்த 2015-ஆம் ஆண்டில் எம்ஏசிசி பல மர நிறுவனங்களின் கணக்குகளை முடக்கியது.