Home வணிகம்/தொழில் நுட்பம் அமெரிக்கா: பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம், மத்திய விசாரணைக் குழு ஒப்புதல்!

அமெரிக்கா: பேஸ்புக் நிறுவனத்திற்கு 5 பில்லியன் டாலர் அபராதம், மத்திய விசாரணைக் குழு ஒப்புதல்!

896
0
SHARE
Ad

கலிபோர்னியா: அண்மையில் பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சேகரித்து வைத்துள்ளது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அந்நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த 5 பில்லியன் டாலர்கள் அபராதத்துக்கு மத்திய விசாரணை குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுமார் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை, அரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டை அந்நாட்டின் மத்திய வணிக ஆணையம் விசாரித்து வந்தது.

#TamilSchoolmychoice

இது குறித்து பேஸ்புக் மற்றும் மத்திய வணிக ஆணையம் எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

ஒரு தொழில்நுட்ப நிறுவனம் மீது அமெரிக்காவின் மத்திய விசாரணை குழு விதிக்கும் அதிகப்பட்ச தொகை இது என உறுதி செய்யப்பட்டுள்ளது.