Home கலை உலகம் தென்னிந்தியாவில் ‘பிகில்’ படம் போன்று வெளிவந்ததில்லை!- ஏ.ஆர். ரஹ்மான்

தென்னிந்தியாவில் ‘பிகில்’ படம் போன்று வெளிவந்ததில்லை!- ஏ.ஆர். ரஹ்மான்

1171
0
SHARE
Ad

சென்னை: ‘பிகில்’ படத்திற்காக நடிகர் விஜய் பாடலொன்றை பாடி இருப்பதாகக் கூறி அது சம்பந்தமாக புகைப்படமொன்றும் வெளியிடப்பட்டிருந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் விஜய் பாடியிருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கான இசை வெளியீட்டுக்கான பணிகள் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆகஸ்ட் 15-ஆம் தேதியன்று மிகப் பெரிய அளவில் பாடல் வெளியீடு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

தென்னிந்தியாவில் விளையாட்டை அடிப்படையாக வைத்து இப்படி ஒரு படம் வெளி வந்ததில்லை என்று ஏ.ஆர். ரஹ்மான் புகழாராம் சூட்டியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது. இயக்குனர் அட்லி படத்தினை சிறப்பாக இயக்கி உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வருகிற தீபாவளி பண்டிகையின் போது படம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.