Home உலகம் எம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்!

எம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்!

1450
0
SHARE
Ad

மாஸ்கோ: கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்17) குறித்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது என ரஷ்ய நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் குரஸ்கோ நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்தார்.

2014-ஆம் ஆண்டில் மலேசிய ஏர்லைன்ஸ் விமானத்தை சுட்டு வீழ்த்தியதற்கு ரஷ்யாதான் பொறுப்பேற்க வேண்டும் என நெதர்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் கருத்துக்கு குரஸ்கோ இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

ஜூலை 2014-இல் கிழக்கு உக்ரேனில் உள்ள ரஷ்ய ஆதரவு பிரிவினைவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலினால் எம்எச்17 விமானம் வானிலே வெடித்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் 298 பேர் கொல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

2018-ஆம் ஆண்டு மே மாதம் நெதர்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய அரசுகள், விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதற்கு ரஷ்யாவே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறின.