Home நாடு தமது கல்வித் தகுதியை மீண்டும் தற்காத்துப் பேசிய மார்சுகி!

தமது கல்வித் தகுதியை மீண்டும் தற்காத்துப் பேசிய மார்சுகி!

822
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இங்கிலாந்தின் புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதாக கூறப்படும் தவறான தகவலுக்கு தாம் எவ்விதத்திலும் பொறுப்பு அல்ல என துணை வெளியுறவு அமைச்சர் டத்தோ மார்சுகி யாயா கூறினார்.

2002-ஆம் ஆண்டில் தாம் கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் யுனிவர்சிட்டியிலிருந்து (Cambridge International University) பட்டம் பெற்றதை அவர் மீண்டும் தற்காத்துப் பேசினார்.

#TamilSchoolmychoice

நான் அரசாங்கத்தில் ஓர் உயர் பதவியில் இருப்பேன் என ஒருபோதும் நினைத்ததில்லை. யாரையும் குழப்புவதற்காக என் கல்வித் தகுதியை நான் பயன்படுத்தவில்லை.எதிர்காலத்தில் எனது வியாபார வாய்ப்புக்காக அக்கல்வியைப் பெற்றேன்” என அவர் தெரிவித்தார்.

இந்த விவகாரம் குறித்து தாம் பதவி விலகுவதா இல்லையா என்பதை பிரதமரிடம் விட்டு விட்டதாக மார்சுகி கூறினார்.

போலியானகல்வித் தகுதித் தகவலை தனது விக்கிபீடியா பக்கத்தில் புகுத்தியதற்காக, கடந்த திங்களன்று மார்சுகி மீது காவல் துறையில் புகார்கள் செய்யப்பட்டன. பின்னர், அப்பக்கம் மீண்டும் திருத்தப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.