கோலாலம்பூர்: 1எம்டிபியிலிருந்து 90 மில்லியன் ரிங்கிட் நிதியுதவியை, பாஸ் கட்சி பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு விசாரணைக்காக,முன்னாள் பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ டாக்டர் நஷாருடின் மாட் இசா, ஊழல்தடுப்புஆணையத்திடம் சில கணக்கறிக்கைகள் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்தார்.
மேலும், அவர் தனி நபர் நிதித் தகவல்களையும், இதர வங்கி அறிக்கைகளையும் ஊழல் தடுப்பு ஆனையத்திடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.
ஊழல் தடுப்பு ஆணையத்தின் இந்த விசாரிப்பில், நிதியின் மூலங்கள் பற்றிய விசயங்கள், நிதி எவ்வாறு செலவழிக்கப்பட்டது போன்ற விவரங்களை விளக்கியதாக நஷாருடின் கூறினார்.