Home Featured நாடு உதவித் தலைவருக்குப் போட்டியா? நாளை அறிவிக்கின்றார் சுந்தர் சுப்ரமணியம்!

உதவித் தலைவருக்குப் போட்டியா? நாளை அறிவிக்கின்றார் சுந்தர் சுப்ரமணியம்!

665
0
SHARE
Ad

Sunther Subramaniamகோலாலம்பூர் – தேசிய உதவித் தலைவர் பதவிக்குப் போட்டியிடவில்லை என துணை கல்வி அமைச்சர் பி.கமலநாதன் இன்று  அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, நாளை சுந்தர் டான்ஸ்ரீ சுப்ரமணியம் (படம்) தனது நிலைப்பாடு குறித்து அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கமலநாதன் போட்டியிலிருந்து ஒதுங்கிக் கொண்டதைத் தொடர்ந்து – டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணியும் தேசியத் துணைத் தலைவருக்குப் போட்டியிடுவதாக நாளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படும் வேளையில் –

சுந்தர் அநேகமாக தேசிய உதவித் தலைவர் போட்டியில் குதிக்கக் கூடும் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

#TamilSchoolmychoice

தேசிய உதவித் தலைவருக்குப் போட்டியிடும் தனது முடிவை சுந்தர் நாளை அறிவிப்பார் என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய துணைத் தலைவருக்கு டத்தோ எம்.சரவணனை எதிர்த்துப் போட்டியிடும் முடிவையும் தேவமணி நாளை ஈப்போவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.