Home Featured கலையுலகம் இறந்த மகனின் ஆன்மாவால் பாதிக்கப்பட்ட சில்வஸ்டர் ஸ்டலோன்!

இறந்த மகனின் ஆன்மாவால் பாதிக்கப்பட்ட சில்வஸ்டர் ஸ்டலோன்!

786
0
SHARE
Ad

rockyv-4லாஸ் ஏஞ்சல்ஸ் – ‘ராக்கி’, ‘ஸ்பசலிஸ்ட்’ போன்ற படங்கள் மூலம் உலக அளவில் ரசிகர்களைப் பெற்ற ஹாலிவுட் நடிகர் சில்வஸ்டர் ஸ்டலோன். இவரது மூத்த மகன் சேஜ் (படம்). இவர் கடந்த 2012-ம் ஆண்டு, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ஆரம்பக்கட்ட விசாரணையில் அவர், போதைப் பொருளின் அதிகபட்ச பயன்பாட்டினால் மரணம் அடைந்ததாகக் கூறப்பட்டது. அதன் பின்னர், அவர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார் என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் சில்வஸ்டர் ஸ்டலோன், சமீபத்தில் இந்தியாவின் புன்னிய தளமான ஹரித்வாரில் நெருங்கிய உறவினர் ஒருவரின் மூலம் சேஜ் ஆன்மா சாந்தி அடைய திதி கொடுத்துள்ளது தெரிய வந்துள்ளது.

#TamilSchoolmychoice

sage-moonblood-stalloneதனது மகனின் ஆன்ம சாந்திக்காக பிரதீக் மிஷ்ரபூரி என்ற ஜோதிடரை சந்தித்த ஸ்டலோன், அவரிடம், தான் சேஜை தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதாகவும், அவர் ஆன்மாவிடம் பேச முடியுமா? என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த மிஷ்ரபூரி, சேஜின் ஆன்மாவுடன் பேச முடியும் என்றும், ஆனால் அதன் பின்னர் அந்த ஆன்மா பெரிதும் பாதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதற்கு பதிலாக, ஹரித்வாரில் சேஜிற்கு திதி கொடுத்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

அதனை ஏற்றுக் கொண்ட ஸ்டலோன், தன் நெருங்கிய உறவினர் மூலம் தேவையான காரியங்களை செய்துள்ளார்.

இது தொடர்பாக ஜோதிடர் மிஷ்ரபூரி ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “சேஜின் மரணத்தால் சில்வஸ்டர் ஸ்டலோன் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தந்தை-மகனாக ஸ்டலோனும், சேஜும் நடித்திருந்த ராக்கி ஐந்தாம் பாகம் இன்றும் மறக்க முடியாத படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.