
லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்களில் மிக நீண்ட காலம் ஒளிபரப்பான தொடர் என்பதுடன், பலரும் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த தொலைக்காட்சித் தொடர் ‘பிரண்ட்ஸ்’.
அந்தத் தொடரின் நடிகர்களில் ஒருவரான மேத்யூ பெரி மர்மமான முறையில் காலமானார் என லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறை அறிவித்துள்ளது. அவருக்கு வயது 54-தான். அவர் தனது அடுக்குமாடி குடியிருப்பில் நீச்சல் குளத்தில் மூழ்கி இறந்து கிடக்கக் காணப்பட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் எப்படி மரணமடைந்தார் என காவல் துறை இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும் அவரின் மரணத்தில் சந்தேகப்படும்படியான அம்சங்கள் இல்லை என முதல் கட்டத் தகவல்கள் தெரிவித்தன.
அவரின் மரணம் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன.