Home நாடு சரவணன் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழா தொடக்கி வைத்தார்

சரவணன் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழா தொடக்கி வைத்தார்

553
0
SHARE
Ad

பூச்சோங் : நேற்று சனிக்கிழமை (28 அக்டோபர் 2023) சிலாங்கூர் மாநில அளவிலான தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கான செந்தமிழ் விழாவைத் தலைமை தாங்கி டத்தோஸ்ரீ எம்.சரவணன் தொடக்கி வைத்தார்.

“மாணவர்களின் பேச்சாற்றல், எழுத்தாற்றல் மற்றும் தன்னம்பிக்கையை வளர்க்கும் விதமாக இது போன்ற போட்டிகள் நடத்துவது சிறப்பு. இன்றைய சூழலில், மாணவர்களின் சிந்தனைத் திறனை அதிகரித்து, அவர்களை எந்த சூழ்நிலைக்கும் ஏற்றவாறு தங்களைத் தயார் படுத்திக் கொள்ள ஆசிரியர்களின் போதனா முறை அமைய வேண்டும்.
இந்த விழா மாணவர்கள் மத்தியில் தமிழ்மொழி மற்றும் இலக்கியத்தின் மேல் தனிப்பட்ட ஆர்வத்தை ஏற்படுத்தும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன்” சரவணன் குறிப்பிட்டார்.

‘தன் காலில் நிற்க ஒருவனுக்கு- எது உதவுமோ அதுவே கல்வி’
என்னும் சுவாமி விவேகானந்தரின் அறிவுரையையும் சுட்டிக் காட்டிய மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான சரவணன் ‘சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்’ என்றும் குறிப்பிட்டார்.