Home Featured வணிகம் 16-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஐபோன் 6 எஸ்!

16-ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது ஐபோன் 6 எஸ்!

660
0
SHARE
Ad

iphone6s_indiaபுது டெல்லி – ஆப்பிள் நிறுவனம் தனது சமீபத்திய வெளியீடான ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளஸ் திறன்பேசிகளை, வரும் 16-ம் தேதி முதல் இந்தியாவில் வெளியிட இருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில் வெளியாகி ஏறக்குறைய மூன்று வார இடைவெளிக்கு பிறகு இந்திய திறன்பேசிகள் துறையில் தனது ஆதிக்கத்தை செலுத்த காத்திருக்கிறது ஆப்பிள் நிறுவனம்.

ஆப்பிளின் புத்தம் புதிய வெளியீடான ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளசின் அடிப்படை விலை முறையே 62,000 மற்றும் 72,000. அதிகபட்ச விலை முறையே 82,000 மற்றும் 92,000. இந்தியாவில் இதுவரை வெளியான ஐபோன்களில் அதிகபட்ச விலையை கொண்ட ஐபோன் இதுவாகத் தான் இருக்க முடியும்.

மலிவு விலையில் திறன்பேசிகளை தொடர் இறக்குமதி செய்து, இந்திய சந்தைகளில் கோலோச்சி வரும் சீன நிறுவனங்களின் முன்னிலையில், ஓரளவு அதிக விலைபட்ச விலையை கொண்டுள்ள சாம்சுங் நிறுவனமே திணறி வரும் நிலையில், ஆப்பிள் நிறுவனம் எத்தகைய துணிச்சலில், அதிகபட்ச விலை கொண்ட ஐபோன்களை இந்திய சந்தைகளில் இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது என விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

#TamilSchoolmychoice

iphone6s_விமர்சனங்களுக்கான காரணமும் ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே உள்ளது. மேற்கத்திய நாடுகளில் ஐபோன்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலை என்பது அங்கு வாழும் நடுத்தர வர்க்க மக்களால் கூட ஓரளவிற்கு ஏற்றுக் கொள்ளத்தக்கதாகவே இருக்கிறது. ஆனால் இந்தியாவில் நகர்புறத்து மேல்தட்டு வர்க்கத்தினருக்கு கூட சற்றே இந்த விலை மலைப்பை ஏற்படுத்தலாம். அப்படி இருக்கையில் ஆப்பிளின் இந்த வெளியீட்டு அறிவிப்பு ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

ஆனால் இதற்கான காரணம் ஆப்பிளிடம் இல்லாமல் இல்லை. இந்தியாவை பொருத்தவரை ஐபோன் என்பது அந்தஸ்தின் அடையாளமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களில் இந்தியாவில் ஆப்பிளின் விற்பனை படுவேகமாக உயர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம், ஆப்பிளின் பழைய வெளியீடான ஐபோன் 6 தான்.

ஐபோன் 6-ற்கு இந்தியர்கள் அளித்த வரவேற்பு, டிம் குக்கையே ஆச்சரியப்பட வைத்தது. அதன் காரணமாகவே ஆப்பிள் துணிந்து களத்தில் இறங்கி உள்ளது.

ஒப்பிட்டு பார்த்தால், ஐபோன் 6-ற்கும், ஐபோன் 6 எஸ்-ற்கும் வெறும் 6000 ரூபாய் தான் வித்தியாசம் உள்ளது. அதை வாங்கிய இந்தியர்களால் கண்டிப்பாக இதையும் வாங்க முடியும் என்ற நம்பிக்கையைத் தான் இந்திய சந்தை ஆப்பிளுக்கு அளித்துள்ளது. எனினும், ஆப்பிளின் கணக்கு வெற்றியைத் தருமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.