Home Video கமல்ஹாசன் பிறந்த நாள் : மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’ குறுமுன்னோட்டம் வெளியீடு!

கமல்ஹாசன் பிறந்த நாள் : மணிரத்னம் இயக்கும் ‘தக் லைப்’ குறுமுன்னோட்டம் வெளியீடு!

225
0
SHARE
Ad

சென்னை: இன்று நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசனின் 70-வது பிறந்த நாள். அதனை முன்னிட்டு அவர் மணிரத்னத்தின் இயக்கத்தில் நடித்து வரும் “தக் லைப்” படத்தின் குறுமுன்னோட்டம் (டீசர்) வெளியிடப்பட்டிருக்கிறது.

வெளியிடப்பட்ட சில மணி நேரங்களில் 7 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை யூடியூப் தளத்தில் மட்டும் இந்தக் குறுமுன்னோட்டம் ஈர்த்துள்ளது. சாமியார் போன்ற நீண்ட முடியுடனான தோற்றத்துடன் கமல்ஹாசன் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளார். மிரட்டலான தோற்றத்தில் சிம்புவும் தோன்றுகிறார்.

திரிஷாவும் இந்தப் படத்தில் நடித்துள்ளார். குறுமுன்னோட்டத்தின் இறுதியில் தக் லைப் படம் ஜூன் 5-ஆம் தேதி திரையீடு காணும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து படத்தின் வெளியீடு மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

ஏ.ஆர்.ரஹ்மான் – மணிரத்னத்தோடு இணைந்து மீண்டும் இந்தப் படத்திற்கான இசையமைப்பைக் கவனித்துள்ளார்.