Home கலை உலகம் அமெரிக்கப் பாடகி தீனா டர்னர் 83-வது வயதில் காலமானார்

அமெரிக்கப் பாடகி தீனா டர்னர் 83-வது வயதில் காலமானார்

610
0
SHARE
Ad
தீனா டர்னர்

சூரிக் (சுவிட்சர்லாந்து) – ஆங்கிலப் பாடல் இசைத் துறையில் – குறிப்பாக ராக் அண்ட் ரோல் எனப்படும் இசைப்பாடல் துறையில் பிரபலமான கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பாடகி தீனா டர்னர் நேற்று புதன்கிழமை (மே 24) தனது 83-வது வயதில் காலமானார்.

அமெரிக்காவில் சாதாரண விவசாயப் பண்ணை வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர் அவர். திருமணம் ஆனதும் முரட்டுத் தனமான கணவரால் தொல்லைகளுக்கு ஆளானவர். இத்தனைக்கும் நடுவில் பிரபல பாடகியாக உருவெடுத்தார்.

சுவிட்சர்லாந்து நாட்டின் சூரிக் நகரிலுள்ள தனது இல்லத்தில் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

பாடும்போது கவர்ச்சியாக உடையணிந்தும், வித்தியாசமான முடி அலங்காரத்தோடும் தீனா டர்னர் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார். அவரைத் தொடர்ந்து பலரும் அவரின் பாணியில் உடையணிந்து இசை நிகழ்ச்சிகள் படைத்தனர்.