Home வாழ் நலம் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் வெள்ளை சாதம்!

இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் வெள்ளை சாதம்!

1107
0
SHARE
Ad

Cook-White-Riceடிசம்பர் 15 – ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டும் சாதத்தை உட்கொள்வது நல்லது. ஆனால் அதை அளவாக உட்கொண்டால் மேலும் நல்லது. அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கும்.

வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால் இரண்டாம் வகை நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது என ஆஸ்திரேலிய விஞானிகள் கூறுகின்றனர். எனவே சாதம் சாப்பிட ஆசைப்பட்டால், கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை சாப்பிடுங்கள்.

கைக்குத்தல் அரிசியுடன் ஒப்பிடுகையில் வெள்ளை சாதத்தில் ஊட்டச்சத்துக்களானது மிகவும் குறைவாக உள்ளதால், இதனை அதிகம் எடுத்துக் கொள்வதால் எவ்வித சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் போவதில்லை.

#TamilSchoolmychoice

danger_foodஉடல் எடையை குறைக்க வேண்டுமானால், குறைந்தது ஒரு மாதத்திற்கு வெள்ளை சாதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் வெள்ளை சாதத்தில் அளவுக்கு அதிகமாக ஊட்டச்சத்து (கார்போஹைட்ரேட் ) உள்ளதால், உடலின் எடையானது இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும்.

கைக்குத்தல் அரிசியுடன் ஒப்பிடும் போது, வெள்ளை சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், தொப்பை வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அவை பசி உணர்வை அடிக்கடி ஏற்படுத்தும்.