Home வாழ் நலம் காபி குடித்தால் கல்லீரல்,நீரிழிவு நோயை உண்டாக்கும்!

காபி குடித்தால் கல்லீரல்,நீரிழிவு நோயை உண்டாக்கும்!

823
0
SHARE
Ad

o-COFFEE-facebookமார்ச் 30 – காபி நமது அன்றாடப் பானங்களில் ஒன்று. பொதுவாக பல்வேறு வேதிப்பொருட்கள் கலந்ததே காபி. அவற்றில், ‘காபின்’ என்ற குறிப்பிட்ட வேதிப்பொருள்தான் உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. அதேசமயம், நம் மூளையில் உள்ள நியூரோ எனும் நரம்பை தூண்டி, புத்துணர்வு அடையவும் செய்கிறது.

காபியில் உள்ள சில வேதிப்பொருட்கள் பல நோய் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்கள் வருவதற்கு காரணம். இன்சுலின் எனும் அமிலம் உடலில் சுரக்கச் செய்வதால், காபி குடிக்கும் பழக்கம், இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுத்தும்.

தினமும் 2 கப் காபி குடிப்பவர்கள் 14 சதவிகிதம் பக்கவாத நோய் வரலாம் என ஆய்வுகள் கூறுகின்றனர். அது மட்டுமல்லாமல் காபியில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்டு எனும் வேதி பொருட்கள் உடல் செல்களைப் பாதிப்படையச் செய்கிறது. இவை கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

#TamilSchoolmychoice

காபியில் உள்ள ‘கேபஸ்டால்’ (Cafestol) எனும் அமிலம் கெட்ட கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இதய நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் கூடுகின்றன.

வயிற்று புண் மற்றும் இதய நோய் உள்ளவர்கள், காபி அருந்துவதை நிறுத்திவிடுவது நல்லது. மேலும் அதிக அளவில் காபி அருந்துபவர்களுக்குத் தூக்கமின்மையும், நெஞ்சு எரிச்சலும் ஏற்படுகிறது.

அதிக அளவில் காபி அருந்துவது பசி உணர்வைப் பாதிக்கிறது, பித்தத்தையும் அதிகரிக்கிறது. தலைவலிக்கும் ஒருவிதத்தில் காரணமாகிறது. கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிகமாக காபி அருந்தினால், பிறக்கும் குழந்தைகள் எடை குறைவாக பிறக்கும் என்று இங்கிலாந்து நாட்டு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Coffeeஎனவே வீட்டில் தயாரிக்கப்பட்ட காபியாகவே இருந்தாலும் நாள் ஒன்றுக்கு 2 சிறிய கப் காபிக்கு மேல் பருக வேண்டாம். காபி பிரியர்கள் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள், வெந்நீர் விட்டுத் தயாரித்த டிகாஷனை எந்தக் காரணம் கொண்டும் மீண்டும் சூடுபடுத்தவே கூடாது.

டிகாஷனோடு சேர்த்து காபியை அடிக்கடி சூடுபடுத்தி அருந்துவது மிகவும் தவறு. டிகாஷன் சேர்க்கப்பட்ட காபியை அருந்துவதே பாதுகாப்பானது. காபி சுவையாக இருக்கவேண்டும் என்பது பலரின் விருப்பம். அதற்காக, ‘சிக்கரி’ சேர்க்கப்படுகிறது. காபியில் 20 சதவீதம்தான் சிக்கரி சேர்க்க வேண்டும்.

சிக்கரி என்பது சுவை, மனம் உடைய வேதிப்போருள். இதை அதிகம் சேர்ப்பது நல்லதல்ல. காபிக்கு அடிமையானவர்கள், அதிலிருந்து விடுபட விரும்பினால் உடனடியாக காபியை நிறுத்திவிடக் கூடாது.

கொஞ்சம் கொஞ்சமாகத்தான் காபியின் அளவைக் குறைத்துக்கொள்ள வேண்டும். விட விரும்பாவிட்டால், தினசரி 2 கப் மட்டுமே என்ற கட்டுப்பாட்டைப் பின்பற்றலாம்.