Home நாடு 2.6 பில்லியன் பணப் பரிமாற்றத்தை ஒப்புக் கொண்டார் நஜிப் – கசிந்தது மொகிதினின் காணொளி

2.6 பில்லியன் பணப் பரிமாற்றத்தை ஒப்புக் கொண்டார் நஜிப் – கசிந்தது மொகிதினின் காணொளி

755
0
SHARE
Ad

unnamed (1)கோலாலம்பூர், ஜூலை 30 – துணைப்பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட அன்றைய இரவு, கெடா மந்திரி பெசார் முக்ரிஸ் மகாதீர், அம்னோ உச்சமன்ற முன்னாள் உறுப்பினர் காதிர் செய்க் பாடசீர் ஆகியோருடன் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் உரையாடுவது போல் காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்காணொளியில் பேசியுள்ள மொகிதின், பிரதமர் நஜிப் துன் ரசாக் தனது வங்கிக் கணக்கிற்கு 2.6 பில்லியன் ரிங்கிட் (700 மில்லியன் அமெரிக்க டாலர்) பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், நஜிப்பின் வங்கிக் கணக்கிற்கு எப்படி அவ்வளவு பணம் வந்தது? என்று தான் கேட்டதாகவும், அதற்கு நஜிப், மத்திய கிழக்கு நாட்டில் வசிக்கும் ஒருவரிடமிருந்து தனக்கு வந்தது என்று பதில் கூறியதாகவும், அக்காணொளியில் மொகிதின் தனது அருகில் அமர்ந்து இருப்பவர்களிடம் கூறுகின்றார்.

#TamilSchoolmychoice

மொகிதின் பேசியுள்ள அந்தக் காணொளி :