Home இந்தியா கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விரும்பினேன், முடியவில்லை – ஜெயலலிதா விளக்கம்! 

கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விரும்பினேன், முடியவில்லை – ஜெயலலிதா விளக்கம்! 

517
0
SHARE
Ad

kalam-rameswaramசென்னை, ஜூலை 30 – “அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் பங்கு கொண்டு, எனது மரியாதையை செலுத்த விரும்பினேன். ஆனால், என் உடல்நிலை காரணமாக, என்னால் கலந்து கொள்ள இயலவில்லை” என்று முதல்வர் ஜெயலலிதா அறிக்கையின் மூலம் தனது விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், கடந்த 27-ம் தேதி, மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங்கில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்கவில்லை என்ற அறிவிப்பு வெளியான போது தமிழக கட்சிகளிடம் சலசலப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், கலாமின் இறுதிச் சடங்கில் பங்கேற்காதது பற்றி ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையல், “அப்துல் கலாம் மீது, எனக்கு மிகுந்த அன்பும், மரியாதையும் உண்டு. அவரது இறுதி சடங்கில் பங்கு கொண்டு, என் மரியாதையை செலுத்த வேண்டும் என்பதே, என் விருப்பம். எனினும், என் உடல்நிலை காரணமாக, என்னால் தற்போது பயணம் மேற்கொள்ள இயலவில்லை.”

#TamilSchoolmychoice

“எனவே, என் சார்பாகவும், தமிழக அரசின் சார்பாகவும், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், சுந்தரராஜ், உதயகுமார், ஆகியோர் ராமேஸ்வரம் சென்று, இறுதி மரியாதை செலுத்த உத்தரவிட்டு உள்ளேன். அத்துடன், அப்துல் கலாமுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவரது இறுதி சடங்கு நடைபெறும் நாளான, 30-ம் தேதி, அரசு விடுமுறை அளிக்க உத்தரவிட்டு உள்ளேன்” என்று அந்த அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

உடல்நிலை சரியில்லை என்பது குறித்து ஜெயலலிதா, வெளிப்படையான அறிக்கையை வெளியிடுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.