Home இந்தியா விளையாட்டுத்துறையில் துரோணாச்சாரியார் விருது அறிவிப்பு!

விளையாட்டுத்துறையில் துரோணாச்சாரியார் விருது அறிவிப்பு!

763
0
SHARE
Ad

turoபுதுடில்லி – ஒவ்வொரு வருடமும் அனைத்துலக அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களையும் வீராங்கனைகளையும் உருவாக்கும் பயிற்சியாளர்களுக்கு மத்திய அரசு சார்பில் ‘துரோணாச்சார்யா’ விருது வழங்கப்படுவது வழக்கம்.

அவ்வகையில், இவ்வாண்டு கீழ்க்கண்ட பயிற்சியாளர்கள் துரோணாச்சார்யா விருதிற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

அணுப்சிங்- மல்யுத்தம்

#TamilSchoolmychoice

நாவல் சிங்- மாற்றுத் திறனானிகளுக்கான பயிற்சியாளர்

நிகார் அமின்- நீச்சல்

எஸ்.ஆர்.சிங்- குத்துச்சண்டை

ஹர்பன்ஸ் சிங்- தடகளம்

இதேபோல் விளையாட்டிற்கு நீண்ட நாள் சேவையாற்றி வரும் வாழ்நாள் சாதனையாளர்களுக்கான ‘தயான்சந்த்’ விருது கீழ்க்கண்ட வீரர்களுக்கு வழங்கப்படுகிறது.

ரோமியோ ஜேம்ஸ்-ஆக்கி,

ஷிவபிரகாஷ் மிஸ்ரா- டென்னிஸ்

டி.பி.பி.நாயர்- கைப்பந்து

இவ்விருதைப் பெறுபவர்களுக்குப் பாராட்டுப் பத்திரத்துடன் தலா ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

வருகிற 29– ஆம் தேதி நடைபெறும் தேசிய விளையாட்டுத் தின விழாவில் இந்த விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்குகிறார்.