Home Featured நாடு தொடரும் பெர்சே 4.0 – சுவாரசிய படக் காட்சிகள் (தொகுப்பு – 2)

தொடரும் பெர்சே 4.0 – சுவாரசிய படக் காட்சிகள் (தொகுப்பு – 2)

901
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 ஓய்வு – அதன் பின்னர் விடிய விடிய பெர்சே 4.0 பேரணி தொடரும் என்ற அறிவிப்பு – இரவு 7.30 மணியளவில் பங்கேற்பாளர்களுக்கு உற்சாகமூட்டிய துன் மகாதீரின் வருகை –

என களை கட்டிக் கொண்டிருக்கும் பெர்சே 4.0 பேரணியின் சுவாரசியமான படக் காட்சிகளின் தொகுப்பு வாசகர்களுக்காகத் தொடர்கின்றது:-

Bersih 4.0 - 2 -1

#TamilSchoolmychoice

பின்னணியில் சிஐஎம்பி வங்கி தெரிய – மாதிரியாகத் தயாரிக்கப்பட்ட 2.6 பில்லியன் காசோலையை ஏந்திக் கொண்டு காட்சி தரும் பங்கேற்பாளர்கள் – கூடவே, “சகோதரரே! எங்களை அவ்வளவு தூரம் முட்டாளாக நினைத்து விட்டீர்களா?” – என்ற வாசகம் வேறு!

Bersih 4.0 -2 -2

“நாங்கள் மலேசியர்கள் – ‘நன்கொடை’ என்ற பெயரில் எங்களுடன் விளையாட்டு வேண்டாம்” என்ற வாசகத்தைக் கொண்ட பதாகையுடன் பங்கேற்பாளர்கள்…

Bersih 4.0 - 2- 3டத்தாரான் மெர்டேக்கா நோக்கி செல்லும் ஜாலான் துன் பேராக் சாலை முழுவதும் ஆயிரக்கணக்கில், நிற்க இடமில்லாத அளவுக்கு குழுமிய மஞ்சள் ஆடை பங்கேற்பாளர்கள்…

Bersih 4.0 -2 -4

இரயில் பயணங்களில் – கையில் கொடியுடன், மஞ்சள் ஆடை அணிந்து டத்தாரான் நோக்கிய இரயில் பயணம் – இவர்களா பிரதமர் நஜிப் கூறும் நாட்டுப் பற்ற மலேசியர்கள்?

Bersih 4.0 - 2 - 5

டத்தாரான் மெர்டேக்கா  மைதானத்தின் முன்பு அமைதியாகத் திரண்டு அமர்ந்திருக்கும் பெர்சே பங்கேற்பாளர்கள்…

Bersih 4.0 - 2 - 6 - Melbourneஎன்ன இந்த இடம் புதிதாக இருக்கிறதே – கோலாலம்பூரில் எங்கே இருக்கின்றது என நீங்கள் கேட்பது தெரிகின்றது. உலகளாவிய அளவில் இன்று நடந்த பெர்சே பேரணிகளின் ஒரு பகுதியாக, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்ற பேரணியில் மலேசியர்கள் கலந்து கொண்டபோது…

Bersih 4.0 - 2- 72.6 பில்லியன் மாதிரி பண நோட்டு ஒன்றைத் தயாரித்துக் கிண்டல் செய்யும் பங்கேற்பாளர் ஒருவர்….

Bersih 4.0 - 2 - 7

நஜிப் மற்றும் துணைப் பிரதமர் சாஹிட்டுக்கு எதிரான – “வேண்டாம் இனி அழுக்கான அரசியல்” என்ற அர்த்தத்திலான பதாகையை ஏந்தியிருக்கும் பங்கேற்பாளர் ஒருவர்…

Bersih 4.0 - Mohd Taib -

சிலாங்கூர் மாநிலத்தின் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ முகமட் தாயிப், மஞ்சள் ஆடை அணிந்து பெர்சே பேரணிக்குத் தயாராகி விட்டார்…

தொகுப்பு: செல்லியல்