Home Featured நாடு நான் மக்களை ஆதரிக்கிறேன், பெர்சேவை அல்ல  – மகாதீர் விளக்கம்!

நான் மக்களை ஆதரிக்கிறேன், பெர்சேவை அல்ல  – மகாதீர் விளக்கம்!

587
0
SHARE
Ad

bersih1கோலாலம்பூர் – “நான் மக்களைத் தான் ஆதரிக்கிறேன், பெர்சேவை அல்ல” என முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

பெர்சே பேரணியில் மகாதீர் கலந்து கொண்டது பற்றி பல்வேறு தரப்பினர் விமர்சித்து வரும் நிலையில், இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த மகாதீர், “பலர் நான் பெர்சேவை ஆதரிப்பதாக விமர்சிக்கின்றனர். நான் மக்களைத் தான் ஆதரிக்கிறேன், பெர்சேவை அல்ல. நான் பெர்சே பேரணியில் கலந்து கொண்டது மக்களுடனான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த தான்” என்று அவர் தெரிவித்தார்.

மகாதீர் இன்றும் பெர்சே பேரணியில் இரண்டாவது முறையாக கலந்து கொண்டது குறிப்பித்தக்கது.