Home இந்தியா லெக்கின்ஸ் தொடர்பான கட்டுரை: குமுதத்திற்கு எதிராகப் பெண்கள் கையெழுத்து இயக்கம்!

லெக்கின்ஸ் தொடர்பான கட்டுரை: குமுதத்திற்கு எதிராகப் பெண்கள் கையெழுத்து இயக்கம்!

784
0
SHARE
Ad

kuudham1சென்னை – பெண்கள் லெக்கின்ஸ் அணிவது குறித்து ‘லெக்கின்ஸ் ஆபாசம் – எல்லை மீறும் இளசுகள்’ என்ற தலைப்பில் குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை வெளியிட்டு சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இக்கட்டுரை வெளியிட்டதைக் கண்டித்தும்,இதற்காகக் குமுதம் ரிப்போர்ட்டர் மன்னிப்புக் கேட்க வலியுறுத்தியும் இணையதளத்தில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தக் கையெழுத்து இயக்கத்தைக் கவிதா முரளிதரன் என்ற பெண் பத்திரிகையாளர் இணையதளத்தில் தொடங்கி, குமுதம் மன்னிப்பு கேட்க வலியுறுத்திவருகிறார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

பெண்களின் அனுமதியின்றியும், குமுதம் அவர்கள் லெக்கின்ஸ் அணிந்த  புகைப்படத்தைப் பிரசுரித்துள்ளது.அதுவும் காற்றில் குர்தா விலகும்போது, மறைந்திருந்து  புகைப்படம் எடுத்து ஆபாச கோணத்தில் பிரசுரித்துள்ளது.

#TamilSchoolmychoice

பெண்கள் கண்ணியமாக ஆடை அணிவது குற்றங்களைக் குறைக்கும் என்ற கோணத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இது பெண்களின் மாண்புக்கு எதிரானது.

எனவே கையெழுத்து இயக்கத்தில் பங்கேற்று, குமுதத்தை மன்னிப்பு கேட்க வலியுறுத்தினால், பிற ஊடகங்களும், பெண்களுக்கு எதிரான கட்டுரைகளைப் பிரசுரிக்க யோசிக்கும்” என அவர் கூறியிருக்கிறார்.

நேற்று தொடங்கப்பட்ட இந்தக் கையெழுத்து இயக்கத்தில் இன்று மாலை வரை ஏறத்தாழ ஆறாயிரம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். இதனால் குமுதம் மன்னைப்புக் கேட்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.