Home வாழ் நலம் வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

வயதானலும் அழகாக இருப்பது எப்படி?

545
0
SHARE
Ad

sri--deviகோலாலம்பூர், மார்ச்.13- சிலர் நாற்பது வயதிலும் மிகவும் இளமையாக தோற்றமளிப்பார்கள்.

இதற்கு வெளித்தோற்றம் மட்டுமல்லாமல் உடலை ஆரோக்கியமாகவும் கட்டுப்பாட்டிலும் வைத்திருப்பதால் இந்த இளமைத் தோற்றம் கிடைக்கிறது.

அந்த வகையில் நீங்கள் நாற்பது வயதை கடந்தவரா? நாற்பது வயதிலும் துடிப்பாகவும், இளமையாகவும் இருக்க விரும்புபவரா? அப்படியெனில் ஐம்பது வயதிலும் அழகாக தோற்றமளிப்பதற்கான சில வழிகள் இதோ..

#TamilSchoolmychoice

உடலில் நீரின் அளவு குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

குறிப்பாக தோலுக்கு நன்மை தரக் கூடிய ஸ்ட்ராபெர்ரி, நீர்ச்சத்து நிரம்பிய கீரை வகைகள், கோஸ் வகைகள் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனால் மருத்துவ குணமிக்க இந்த உணவுகள் தோலுக்கு ஆச்சரியப்படும் வகையில் நன்மை செய்யும்.

தலைமுடியை சரியாக கவனிக்க வேண்டும். தலைமுடிக்கு டை அடிக்க விரும்பினால் அதன் வண்ணத்தை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கவும். சாதரணமாக 60-வயதை கடந்த பின்னர் டை அடிப்பது செயற்கையாகவே தெரியும்.

தலைமுடியின் நீளத்தை கவனிக்கவும். குறைந்த நீளத்தையுடைய தலைமுடி அதிக நீளமுடைய தலைமுடியை விட நல்ல தோற்றத்தை கொடுக்கக் கூடியதாகும். பொதுவாகவே தோள்பட்டைக்கு மேலே முடி இருப்பது நன்கு பொருத்தமானதாக இருக்கும்.

எடையை சரியாக பராமரித்து வர வேண்டும். சரியான உணவு முறைகளும் ஒவ்வொரு நாளும் உடற்பயிற்சி செய்வதும்  உடல் எடையை ஆரோக்கியமானதாக வைத்திருக்க உதவும்.

இந்த வயதில் அதிகப்படியான அலங்காரங்களை தவிர்ப்பது நல்லது. வயதாகும் போது குறைந்த அளவு அலங்காரம் தான் அழகாகவும் இயற்கையானதாகவும் இருக்கும்.

நல்ல வெளுப்பாக இருந்தால் கண்ணிமைகளுக்கும் கண்ணின் வெளிப்பகுதிகளுக்கு சாம்பல்  நிறத்தில் வண்ணம் கொடுக்கலாம். கருமை நிறத்தில் இருந்தால் கருப்பு நிற மையை பயன்படுத்த வேண்டாம்.