Home Featured நாடு சுலுசுல்தான் மகளுடன் நூருல் இஷா – சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்!

சுலுசுல்தான் மகளுடன் நூருல் இஷா – சர்ச்சையில் சிக்கிய புகைப்படம்!

547
0
SHARE
Ad

Nurulகோலாலம்பூர் – லகாட் டத்து ஊடுருவலுக்கு உத்தரவிட்ட சுலு சுல்தானின் மகளுடன், பிகேஆர் தேசிய உதவித்தலைவர் நூருல் இஷா அன்வார் புகைப்படம் எடுத்துள்ளது குறித்து இரண்டு அணியிலும் உள்ள சட்டவல்லுநர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

‘அன்வாரை உடனே விடுதலை செய்யுங்கள்’ என்ற வாசகம் பொறித்த பதாகையை ஏந்தியபடி, நூருல் இஷாவும், இளவரசி ஜேசல் எச்.கிராம் ஹசானும் பிரச்சாரம் செய்வது போன்ற புகைப்படம் நட்பு ஊடகங்களில் பரவி வருவது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சபாவில் 200 ‘சுலு படைகளை’ அனுப்பி ஊடுருவும் முயற்சியில் இறங்கிய சுலு சுல்தான் ஜமாலுல் கிராம் 3-ன் மகள் தான் இந்த ஜேசல் என்பவர்.

#TamilSchoolmychoice

தற்போது அப்புகைப்படம் குறித்து விளக்கமளிக்கும் படி, தேசிய முன்னணி மற்றும் எதிர்கட்சிக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து கூறிவருவது குறிப்பிடத்தக்கது.