நகரி, மார்ச்.13- திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் தெப்ப உற்சவ விழா வரும் 23ம் தேதி முதல் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது.
தெப்ப உற்சவ விழாவின் ஐந்து நாட்களிலும் மலையப்ப சுவாமி பல அவதாரங்களில் மாலை நேரத்தில் தெப்ப திருக்குளத்தில் உற்சவராக எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.
இம்மாதம், 27ம் தேதி தெப்ப உற்சவ விழா நிறைவை ஒட்டி மலையப்பசுவாமி ஸ்ரீ தேவி பூதேவி சமேதரராக ஏழு சுற்றுகள் திருக்குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
தெப்ப உற்சவத்தை முன்னிட்டு திருமலை கோவிலில் முதல் மூன்று நாட்கள் வசந்த உற்சவம் சகஸ்ர தீபாலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.