Home Featured உலகம் இந்திய சுற்றுலாப் பேருந்திற்கு தீ வைப்பு – நேபாளத்தில் பதற்றம்!

இந்திய சுற்றுலாப் பேருந்திற்கு தீ வைப்பு – நேபாளத்தில் பதற்றம்!

647
0
SHARE
Ad

nepal-flagபோக்ரா – நேபாளத்திற்கு பயணிகளுடன் சுற்றுலா சென்ற இந்திய சுற்றுலாப் பேருந்து, போக்ரா நகரில் அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைத்து கொளுத்தப்பட்டதாக தகவல்கள் வந்துள்ளன. இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் இல்லை என நேபாள வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் தென்பகுதியில் வாழும் மாதேசிகள் எனப்படும் பீகாரைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியினருக்கு ஆதரவாக இந்தியா செயல்படுவதால் அங்கு இந்தியாவின் மீது எதிர்ப்பு அலைகள் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.