Home வாழ் நலம் உடல் களைப்பு நீங்கி பலம் பெற

உடல் களைப்பு நீங்கி பலம் பெற

598
0
SHARE
Ad

healthy-lifeகோலாலம்பூர், மார்ச்.14-உடல் மெலிந்து காணப்படுவோர் குண்டாக வேண்டுமானால் வேப்பம்பூவை ஊறவைத்து குடிநீர் தயாரித்து காலையில் பருகி வந்தால் சிறுகச்சிறுக உடல் மெலிவு நீங்கி உடல் குண்டாகத் தொடங்கும்.

பேரீச்சம்பழத்தில் இரும்புசத்து அதிகம் உள்ளது. எந்த காரணத்தினால் உடல் இளைத்து இருந்தாலும் பேரீச்சம்பழத்தை முறையாக உணவோடு சேர்த்து எடுத்துக்கொண்டால் மெலிந்த உடல் தேறும்.

முருங்கை ஈர்க்குகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டு கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால்கள் உடல் அசதிகள் நீங்கும். உடலில் பலமும் ஏறும். உடலைத் தேற்றும் நல்ல உணவாகும்.

#TamilSchoolmychoice

அருகம்புல்லை வேரோடு பறித்து சுத்தம் செய்து சிறிது தண்ணீர் சேர்த்து அம்மியில் வைத்து மை போல அரைத்து சம அளவு வெண்ணெய் கலந்து காலை மாலை என நீண்ட நாட்கள் சாப்பிட்டு வர உடலில் பலம் ஏறும்.

வெந்தயக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிடுவது நல்லது. உடலுக்கு பலத்தைக் கொடுக்கும். கண் சம்பந்தமான கோளாறுகள் நீங்கும். பார்வை தெளிவடையும். சொரி சிறங்கை அகற்றும் மேலும் அஜீரணத்தை போக்கும்.

வேப்பம்பூ, நிலவேம்பு ஆகிய  இரண்டையும் நன்றாக நசுக்கி அதில் 1 டம்ளர் கொதிக்கும் நீரை ஊற்றி வைத்து விட்டு, இரண்டு மணி நேரத்திற்கு பிறகு வடிகட்டி வேளைக்கு 2  முறை சாப்பிட்டு வர காய்ச்சலுக்கு பின் உண்டாகும் உடல் சோர்வு நீங்கிவிடும்.

அரிசி தவிட்டுடன் பனை வெல்லத்தை கலந்து சிறு உருண்டை செய்து வாயில் போட்டு சாப்பிட்டால் உடல் நல்ல பலன் பெறும். கல்யாணபூசணி சாறு 1 டம்ளர் எடுத்து அதில் பனை வெல்லத்தைப் போட்டுக் கலக்கி ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட்டு வந்தால் உடம்பில் ஏற்படும் தளர்ச்சி களைப்பு மூளச்சோர்வு அத்தனையும் சரியாகிவிடும்.

நீண்ட நாள் வியாதியில் வாடுவோருக்கு ஆரஞ்சுபழ ரசமும் ஆரஞ்சு தோல் சேர்த்து நீரும் தக்காளிபழ ரசமும் மூன்றும் சமமாக கலந்து குடித்தால் சீக்கிரத்தில் ரத்தம் அபிவிருத்தி அடைகிறது. நல்ல பலத்தையும் சுறுசுறுப்பையும் பெறலாம்.