Home Featured நாடு ‘கவனக்குறைவால்’ தவறான விமானப் பயணத்திட்டம் வழங்கப்பட்டுவிட்டது – மாஸ் அறிக்கை!

‘கவனக்குறைவால்’ தவறான விமானப் பயணத்திட்டம் வழங்கப்பட்டுவிட்டது – மாஸ் அறிக்கை!

497
0
SHARE
Ad

Malaysia-airlines-logo-1987கோலாலம்பூர் – கடந்த வெள்ளிக்கிழமை காலை, ஆக்லாந்து விமான நிலையத்தில் இருந்து கோலாலம்பூருக்கு வந்த மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச்132 விமானம், தவறான பாதையில் சென்றது தங்களின் கவனக்குறைவு தான் என்பதை ஒப்புக் கொண்டுள்ள மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம், அது குறித்து விசாரணையை மேற்கொண்டு வருவதாக இன்று அறிவித்துள்ளது.

இது குறித்து மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆக்லாந்தில் இருந்து கோலாலம்பூர் வந்த எங்களது விமானம் எம்எச்132 -க்கு அண்மைய விமான இயங்களின் பயணத் திட்டம் (Operations Dispatch Centre – ODC) வழங்கப்பட்டது. அதேவேளையில், ஆக்லாந்தின் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்திற்கு கவனக்குறைவாக அதன் முந்தையப் பயணத்திட்டம் வழங்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளது.

“இரண்டு பாதைகளுமே அங்கீகரிக்கப்பட்ட விமானப் பாதைகள் என்பதோடு, இரண்டு பாதைகளிலும் செல்லும் அளவிற்கு அதில் தேவையான எரிபொருளும் இருந்தது. விமானப் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் எந்த ஒரு சமரசத்தையும் நாங்கள் எடுத்துக் கொள்ளவில்லை”

#TamilSchoolmychoice

“தற்போது விமானப் பயணத்திட்டம் வழங்கப்பட்டது குறித்து மலேசியா ஏர்லைன்ஸ் விசாரணை நடத்தி வருகின்றது. மலேசியா ஏர்லைன்சைப் பொறுத்தவரையில் பாதுகாப்பு என்பது எங்களின் முதன்மை நோக்கம் மற்றும் அனைத்து பாதுகாப்பு முறைகளையும் நாங்கள் மிகக் கடுமையான முறையில் கடைபிடித்து வருகின்றோம்.” என்று தெரிவித்துள்ளது.