Home Featured கலையுலகம் ரஜினி ஒரு ஆச்சரியம் – ராதிகா ஆப்தே நெகிழ்ச்சி!

ரஜினி ஒரு ஆச்சரியம் – ராதிகா ஆப்தே நெகிழ்ச்சி!

669
0
SHARE
Ad

rajinikanth-radhikaமும்பை – ‘அட்டக்கத்தி’ ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து இருக்கும் படம் கபாலி.  ஏறக்குறைய படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக செய்திகள் வருகின்றன. ரஜினியும் தற்போது ஷங்கரின் எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், கபாலியில் ரஜினியுடன் நடித்த அனுபவத்தை, நடிகை ராதிகா ஆப்தே பத்திரிக்கைகளில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவர், “கபாலியில் நடிப்பதற்கு முன், ரஜினி குறித்து எனக்கு எவ்வித கருத்தும் இல்லை. ஆனால் அவருடன் நடித்து முடித்த பிறகு யோசித்தால் கடந்த 14 ஆண்டுகளில் நான் சந்தித்த அருமையான மனிதர் என்று அவரையே சொல்வேன்.”

“கடுமையான உழைப்பாளி. செப்டம்பர் 18-ம் தேதியில் இருந்து தொடர்ச்சியாக கபாலியில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஆனால் ஒரு சமயம் கூட, அவர் சோர்ந்து இருந்ததை நான் பார்க்கவில்லை. அதே போல் அவரது காட்சி முடிந்ததும் ஒரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு புத்தகம் படிக்க ஆரம்பித்துவிடுகிறார். மொத்தத்தில் ரஜினிகாந்த் ஒரு ஆச்சரியமான மனிதர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.