புது டெல்லி – நடிகர் ரஜினிகாந்திற்கு குடியரசு தின விழாவின் போது நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன் உண்மைத்தன்மை பற்றி உறுதியான தகவல்கள் தெரியவில்லை என்றாலும், நம்பத்தகுந்த டெல்லி வட்டாரங்கள் ரஜினிக்கு விருது உறுதி என்றே கூறுகின்றன.
ரஜினியுடன் சேர்த்து பாலிவுட் நடிகர் அனுபம் கேருக்கும் பத்ம விபூஷண் விருது வழங்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 2000-ம் ஆண்டு, ரஜினிக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.