Home Featured தமிழ் நாடு ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் அதிமுக அலுவலகம் வந்தனர்!

ஓ.பன்னீர் செல்வம், நத்தம் விஸ்வநாதன் அதிமுக அலுவலகம் வந்தனர்!

685
0
SHARE
Ad

Jayalalithaa-O.-Panneerselvamசென்னை – தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மற்றொரு அமைச்சரான நத்தம் விஸ்வநாதன் இருவரும் இன்று சென்னையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

இதனைத் தொடர்ந்து அவர்களுக்கும் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் இடையில் இருந்து வந்த பிணக்கு ஒரு முடிவுக்கு வந்திருப்பதாகக் கருதப்படுகின்றது.

நேற்று அமைச்சர் பன்னீர் செல்வம்  வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக தகவல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லம் சென்று தமிழக முதல்வரைச் சந்தித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் பன்னீர் செல்வத்தின் தாயார் உடல் நலக் குறைவால் இராமநாதபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.