Home வாழ் நலம் எல்லா நோய்களுக்கும் தண்ணீர் சிறந்த மருந்து!

எல்லா நோய்களுக்கும் தண்ணீர் சிறந்த மருந்து!

551
0
SHARE
Ad

waterகோலாலம்பூர்,  மார்ச்.18- எப்போதெல்லாம் நமது உடம்பு கூடுதல் தண்ணீருக்காக ஏக்கம் கொள்கிறதோ, அப்போதே நமக்கு தாகம் ஏற்பட்டு விட்டது என்றே பலரும் இன்று வரை நம்பிக் கொண்டுள்ளனர்.

அது உண்மைதான். ஆனாலும், உடம்பில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது என்பதை அறிந்து கொள்ளும் பொருட்டு, உடம்பின் ஒரு சில அல்லது அனைத்துப் பாகங்களிலிருந்தும் பல்வேறு அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகளை நாம் காணலாம்.

இந்த அறிகுறிகளை நாம் கண்டு கொள்ளாமல் வெறுமனே இருந்துவிட்டால் அதுவே பலவிதப் பெரும் வியாதிகளை வரவழைத்துவிடும். இதற்கென மருந்துகள் இருந்தாலும் அவையெல்லாம் குணப்படுத்துமேயன்றி சிகிச்சை அளிக்கவியலாது. நிறைய தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

#TamilSchoolmychoice

உடல்நிலையில் ஏற்படும் பல்வேறு கோளாறுகளை தடுத்து நிறுத்தும் பணியில் பெரும்பங்கை தண்ணீரே ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் பெரும் வியாதிகள் தொடக்கத்திலே தடுக்கப்படுகின்றன. தவிர, பல்வேறு இயற்கையான நிவாரண யுக்திகளில்  தண்ணீர்தான் பெரும்பங்கை ஏற்றுள்ளது.

உடலின் மொத்த எடையில் தண்ணீரின் பங்கு மட்டுமே எழுபது சதவிகிதமாகும். உடலின் அனைத்துப் பாகங்களிலும் அது வியாபித்திருந்தாலும், மூளை மற்றும் நுரையீரல் போன்ற உறுப்புகளிலும், இரத்தம், உமிழ்நீர், நிணநீர் போன்ற திரவங்களிலும், ஜீரண முறையில் உள்ள உறுப்புகளின் சுரப்பிகளிலும் அதிகப்படியாகவே அடங்கியுள்ளது.