Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ வர்த்தக விழாவில் டிஎச்ஆர் ராகாவின் “எல்லோரும் கொண்டாடுவோம்” சிறப்பு நிகழ்ச்சி!

அஸ்ட்ரோ வர்த்தக விழாவில் டிஎச்ஆர் ராகாவின் “எல்லோரும் கொண்டாடுவோம்” சிறப்பு நிகழ்ச்சி!

1126
0
SHARE
Ad

thr-raaga-deepavali-kondattam-poster

கிள்ளான் – அஸ்ட்ரோவின் மாபெரும் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் 2016 – டிஎச்ஆர் ராகாவின் “எல்லோரும் கொண்டாடுவோம்” நிகழ்ச்சியுடன் நாளை ஞாயிற்றுக்கிழமை (2 அக்டோபர் 2016) நிறைவடையவுள்ளது.

ராகாவின் “எல்லோரும் கொண்டாடுவோம்” நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

  • இடைவிடாத ஆடல் பாடல்
#TamilSchoolmychoice

டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்கள் ஆனந்தா, உதயா, ராம், ரேவதி, சுரேஷ், கவிமாறன், கீதா, அகிலா, ஷாலு, ஜெய், யாசினி ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். இந்நிகழ்ச்சியில் இவர்களின் இடைவிடாத ஆடல் பாடல் என பல அற்புதமான படைப்புகள் வலம் வரவிருக்கின்றன.

  • ராகாவின் ஸ்டார் யார் இறுதிச்சுற்றின் போட்டியாளர்கள்

டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களுடன் இணைந்து 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற ராகாவின் ஸ்டார் யார் போட்டியின் இறுதிச்சுற்றின் போட்டியாளர்களான நரேஷ், டர்ஷாமினி மற்றும் வேலராசன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

thr-raaga-battle-round-2-oct-2016

  • இரண்டு குழுக்களாக கடுமையான போட்டி

ஆடல் பாடல் மட்டுமின்றி ராகாவின் அறிவிப்பாளர்களும் ராகாவின் ஸ்டார் யார் இறுதிச் சுற்றின் போட்டியாளர்களும் “கடலிலே முளைத்த கருவேப்பில்லை” மற்றும் “நேத்து சுட்ட முறுக்கு” – என இரண்டு குழுக்களாக மோதும் போட்டி இம்மேடையிலேயே நடைபெறவுள்ளது. மூன்று சுற்றுகளைக் கொண்ட இப்போட்டியில் ஒவ்வொரு குழுவும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் வண்ணம் வாய்ப்புகள் வழங்கப்படும்.

  • போட்டி விளையாட்டுகள்

இதைத் தவிர்த்து, இரசிகர்களுக்காக ராகாவின் அறிவிப்பாளர்கள் பல போட்டி விளையாட்டுகளையும் ஏற்று நடத்தவுள்ளார்கள். வெற்றி பெறுபவர்களுக்கு  பரிசுகளும் காத்துக் கொண்டிருக்கின்றன.

  • நுழைவு இலவசம்

கட்டணமின்றி இலவசமாக நடைபெறும் இந்நிகழ்ச்சியில் உங்களின் அபிமான டி.எச்.ஆர் ராகாவின் அறிவிப்பாளர்களை ஒரே மேடையில் காணும் அரிய வாய்ப்பு இதுவாகும்.

ஆகவே, ஞாயிற்றுக்கிழமை 2-ஆம் தேதி இரவு 8.00  மணிக்கு ஜிஎம் கிள்ளானில் (GM Klang Wholesale City) வளாகத்தில் உங்கள் குடும்பத்தோடு ராகாவின் “எல்லோரும் கொண்டாடுவோம்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழுங்கள்.