Home Featured கலையுலகம் அஸ்ட்ரோவின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

அஸ்ட்ரோவின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்

813
0
SHARE
Ad

4647-deepavali-wb-450x330

கோலாலம்பூர் – தீபாவளியை முன்னிட்டு தனது பல தமிழ் அலைவரிசைகளிலும், அஸ்ட்ரோ தொலைக்காட்சி பல சிறப்பான நிகழ்ச்சிகளை வரிசையாக ஒளிபரப்பி வருகின்றது.

எல்லோரும் கொண்டாடுவோம் என்ற சுலோகத்தோடு இந்த ஆண்டு அஸ்ட்ரோ தீபாவளி நிகழ்ச்சிகள் ஒளியேறுகின்றன.

#TamilSchoolmychoice

அவற்றில் சிலவற்றை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

திரைப்படங்கள்

விண்மீன் அலைவரிசையில் துல்லிய ஒளிபரப்பில் பசங்க-2, பெங்களூர் நாட்கள் மற்றும் சேதுபதி ஆகிய படங்கள் ஒளிபரப்பாகின்றன.

இவை தவிர தமிழ்த் திரைப்படங்களுக்கான பிரத்தியேக அலைவரிசையான வெள்ளித்திரையில் பூலோகம், ரஜினிமுருகன், தங்கமகன், வேதாளம் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படும்.

வானவில் சிறப்பு நிகழ்ச்சிகள்

வானவில் அலைவரிசையிலும், தீபாவளி கொண்டாட்ட நிகழ்ச்சிகள், தமிழ்ப் பள்ளியில் தீபாவளிக் கொண்டாட்டம் சிறப்பு இசை நிகழ்ச்சி, அஸ்ட்ரோவின் சொந்தத் தயாரிப்பில் மலர்ந்த தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் போன்றவை ஒளிபரப்பாகும்.

தமிழகத் தொலைக்காட்சிகள்

இவை தவிர தமிழகத்தின் சன் டிவி, ஸ்டார் டிவி, கலைஞர் டிவி, ஜெயா டிவி, போன்ற அலைவரிசைகளின் பல சிறப்பு நிகழ்ச்சிகளும் அஸ்ட்ரோவின் வழி ஒளிபரப்பாகும்.

இந்த நிகழ்ச்சிகள் குறித்த மேலும் விரிவான தகவல்களை அஸ்ட்ரோவின் கீழ்க்காணும் இணையத் தளத்தில் பெறலாம்:-

http://www.astroulagam.com.my