Home Featured கலையுலகம் அஸ்ட்ரோ ‘சூப்பர்ஸ்டார் என்றும் 16’ வெல்லப் போவது யார்?

அஸ்ட்ரோ ‘சூப்பர்ஸ்டார் என்றும் 16’ வெல்லப் போவது யார்?

908
0
SHARE
Ad

astro superstar-grand-finale-6-finalists

கோலாலம்பூர் – திறமையான உள்நாட்டுப் பாடகர்களைக் கண்டறிந்து அவர்களை சூப்பர் ஸ்டாராக ஜொலிக்க வைத்த ஒரு பிரம்மாண்ட நிகழ்ச்சி, ‘ரியாலிட்டி ஷோ’ எனப்படும் வரிசையில் அஸ்ட்ரோவின் சூப்பர்ஸ்டார் போட்டி. இவ்வாண்டு புதிய பரிணாமத்தோடு கூடுதல் வித்தியாசங்களுடன் நடைபெற்று வந்த இந்த பாடல் திறன் போட்டிகளின் சுற்றுகள் நிறைவடைந்து, எதிர்வரும் சனிக்கிழமை நவம்பர் 19-ஆம் தேதி ‘சூப்பர்ஸ்டார் என்றும் 16’ மாபெரும் இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.

‘என்றும் 16’ என்ற கருப்பொருளோடு 16-ஆவது முறையாக நடைபெறும் இந்நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றில் அலெக்ஸ் ராவ் ராஜூ, 26 (சிலாங்கூர்), குமரேஷ் கமலக்கண்ணன், 22 (கோலாலம்பூர்), நாராயினி பாலசுப்ரமணியம், 24 (பினாங்கு), போமதிபிரியா சுரேஷ், 20 (பேராக்), சிந்திஹஸ்னி ஆறுமுகம், 22 (சிலாங்கூர்) மற்றும் ரூபன் ராஜ் சாமுவேல், 23 (பேராக்) ஆகியோர் களமிறங்குகின்றார்கள் (மேலே படத்தில் உள்ளவர்கள்).

#TamilSchoolmychoice

astro-superstar-pcஇன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகியுள்ள போட்டியாளர்கள், அறிவிப்பாளர்கள், வணிக ஆதரவாளர்கள் ஆகியோர்…

அஸ்ட்ரோ நிகழ்ச்சிகளுக்கான உயர்நிலை மூத்த துணைத்தலைவர் டாக்டர் ராஜாமணி செல்லமுத்து கூறுகையில், “திறமை வாய்ந்த மலேசியர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமைகளை மேன்மேலும் வளர  அவ்வப்போது இவ்வகையான போட்டிகளைத் தயாரிப்பது மட்டுமின்றி இளைஞர்களுக்கும் வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுக்கின்றோம். சூப்பர்ஸ்டார் நிகழ்ச்சி என்பது வேறும் பாடல் போட்டி மட்டுமல்ல. நம்  நாட்டின் கலைஞர்கள் தங்களுடைய திறமைகளை வெளிகோணர ஒரு சிறந்த தளமாக விளங்குகின்றது. 16 வருட காலமாக ஆதரவு வழங்கி வரும் அனைவருக்கும் இவ்வேளையில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்”  என்றார்.

இப்போட்டியின் இறுதிச் சுற்று நம் நாட்டின் புகழ்பெற்ற கலைஞர்களான டாக்கி, விக்னேஷ் ஜெய், குயீன், ஹரிஹரன், ஹஸ்மிதா, தர்னேஸ்வரி, அகாடமி பண்டாசியா (Akademi Fantasia -AF) போட்டியின் முன்னாள் மாணவர்கள் அக்கிம் மற்றும் ரேஷ்மா, ஆட்டம் 100  வகை மகேன், செரியா போப்ஸ்டார் (Ceria Popstar) காஷிகா ஆகியோரின் படைப்புகளுடன் தொடங்கவுள்ளது.  இவர்கள் நம் நாட்டின் பிரபலமான இசையமைப்பாளர் ஜெய் இசையில் இவ்வாண்டு சூப்பர்ஸ்டார் போட்டிக்காக  ‘என்றும் 16’ எனும் பாடலை பாடவுள்ளார்கள்.

இந்த  மாபெரும் இசைப் போரில் மூன்று சுற்றுகள் இடம்பெறும். முதல் சுற்றில் 2 போட்டியாளர்கள் நீக்கப்பட்டு சிறப்பாகப் பாடிய 4 போட்டியாளர்கள் இரண்டாம் சுற்றுக்குத் தகுதிப் பெறுவர். இரண்டாம் சுற்றில் மேலும் இருவர் நீக்கப்பட்டு எஞ்சிய இருவர் இறுதிச் சுற்றான  மூன்றாவது சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சவால் நிறைந்த இந்தச் சுற்றுதான் ‘சூப்பர்ஸ்டார் என்றும் 16’ போட்டியின் வெற்றியாளரை நிர்ணக்கும். அறிவிப்பாளர் குமரேஷ் மற்றும் ரேவதி இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கவுள்ளார்கள்.

வெற்றியாளருக்கு கார் பரிசு

முதல் நிலை வெற்றியாளர் ரிம 20,000 ரொக்கமும் ஒரு Honda HRV காரையும் தட்டிச் செல்லும் அரிய வாய்ப்பு காத்து கொண்டிருக்கின்றது. இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் மற்றும் ஆறாம் நிலை வெற்றியாளர்களுக்கு ரிம 10,000, ரிம 6,000 மற்றும் ரிம 5,000 முறையே வழங்கப்படும்.

superstar-grand-finale-host-kumaresh-revathyஇறுதிச் சுற்றுக்கு அறிவிப்பாளர்களாகப் பணியாற்றும் குமரேஷ் மற்றும் ரேவதி…

‘சூப்பர்ஸ்டார் என்றும் 16’ இறுதிச் சுற்றுப் போட்டி இவ்வாரம் சனிக்கிழமை 19-ஆம் தேதி இரவு 8 மணிக்கு ஷா ஆலாமில் அமைந்துள்ள ராஜா மூடா மூசா அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியின் நேரடி ஒளிபரப்பை அஸ்ட்ரோ விண்மீன் எச்.டி (231), அஸ்ட்ரோ வானவில் (201) மற்றும் அஸ்ட்ரோ ஒன் தி கோ-வில் கண்டு களிக்கலாம்.

சூப்பர்ஸ்டார் போட்டியின் முதன்மை ஆதரவாளர் ‘போ’ – ‘BOH’ தேயிலை, மற்றும் இணை ஆதரவாளர் குளோ ஸ்கின் வைட் (‘Glow Skin White’) மற்றும் டி.எச்.ஆர் ராகா அதிகாரபூர்வ வானொலி நிலையம் ஆகியோரின் ஆதரவுடன் இந்த இறுதிச் சுற்று நடைபெறுகின்றது.

‘போ’ நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் ஏற்றுமதி பிரிவின் தலைவர் சென் சாவ் சாங், கூறுகையில், “மூன்றாவது முறையாக உள்ளூர் திறமைகளை அடையாளம் காணும் இம்முயற்சியில் தாங்களும் ஆதரவாளராக இணைந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். இவ்வாண்டு இந்தப் போட்டி இளம் திறமையாளர்களுக்கு பலவகையான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளது.  இறுதி சுற்று எவ்வளவு சுவாரசியமாக நடைபெறப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாகவும்” தெரிவித்தார்.