Home Featured நாடு மலேசிய விமானப் படை விமானம் நொறுங்கியது! விமானி மரணம்!

மலேசிய விமானப் படை விமானம் நொறுங்கியது! விமானி மரணம்!

933
0
SHARE
Ad

royal_malaysian_air_force-imageபட்டவொர்த் – அரச மலேசிய விமானப் படையைச் சேர்ந்த விமானம் ஒன்று, இன்று பட்டவொர்த் விமானப் படைத் தளத்தின் அருகே விழுந்து நொறுங்கியதில் அதன் விமானி மரணமடைந்ததோடு, அதில் பயணம் செய்த மேலும் மூவர் காயமடைந்தனர்.

இன்று புதன்கிழமை மாலை 5.18 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.விபத்துக்குள்ளானது பீச்கிராப்ட் பி200டி (Beechcraft B200T) ரக விமானமாகும்.

விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் செபராங் ஜெயா மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர்.

#TamilSchoolmychoice

விபத்து குறித்த புலனாய்வுகளை அரச மலேசிய விமானப் படை முடுக்கி விட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானம் கடலோரப் பகுதிகளில் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வந்தது என்றும் சுபாங் விமானப் படைத் தளத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டது என்றும் விமானப் படை அறிக்கை தெரிவித்துள்ளது.