Home நிகழ்வுகள் மலேசிய தமிழ்ப் பாவலர் மன்றம் வழங்கும் 15ஆவது இலக்கணப் பட்டறை

மலேசிய தமிழ்ப் பாவலர் மன்றம் வழங்கும் 15ஆவது இலக்கணப் பட்டறை

628
0
SHARE
Ad

tamilகோலாலம்பூர், மார்ச்.21- எதிர்வரும் 24.3.2013 ஆம் தேதி ஞாயிற்றுகிழமை பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30  மணி வரை இலக்கணப் பட்டறை நடைபெறும்.

பிற்பகல் 2.30 மணி முதல் 3.30 மணி வரை அடிப்படை இலக்கணமும், பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாப்பிலக்கணமும் போதிக்கப்படும்.

முற்றிலும் இலவசமாக நடத்தப்படும் இப்பயிற்சியில் கலந்துக் கொண்டு இலக்கணம் பயின்று நல்ல கவிஞராவதோடு மரபு கவிதைகளைக் கற்று புகழும் அடையலாம்.

#TamilSchoolmychoice

இப்பட்டறையில், சிறுகதை எழுதுவது எப்படி என்ற வழிக்காட்டலும் அதற்கான கையேடும் வழங்கப்படும். இப்பட்டறை, எண்.7, ஜாலான் சத்து, தாமான் பத்து கேவ்ஸ், விளையாட்டுத் திடலின் முன்புறம், அம்னோ பிளாசாவின் பின்புறம் என்ற முகவரியில் நிகழவுள்ளது.

மேல் விவரங்களுக்கு, மன்றத் தலைவர் கவிஞர் ஏ.ஆர்.சுப்ரமணியம் 013-3323142 மற்றும் கவிஞர் மு.சு.கார்த்திக் 016-415337  என்ற எண்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.