Home Featured வணிகம் அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா – தீபாவளி கொண்டாட்டம் 2017

அஸ்ட்ரோவின் அனைத்துலக இந்திய வர்த்தக விழா – தீபாவளி கொண்டாட்டம் 2017

1338
0
SHARE
Ad

astro-expo-deepavaliஅஸ்ட்ரோவின் 3-வது மாபெரும் அனைத்துலக இந்திய வர்த்தக விழா மற்றும் தீபாவளி கொண்டாட்டம் நிகழ்வு வரும் செப்டம்பர் 21-ஆம் தொடங்கி, செப்டம்பர் 24-ஆம் தேதி வரை, 4 நாட்களுக்குத் ஜிஎம் கிள்ளானில் (GM Klang Wholesale City) வளாகத்தில் காலை 11 மணி முதல் இரவு 11 மணி வரை மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.

ஜவுளி, ஆபரணங்கள், தொலைத் தொடர்பு, இயற்கை வளம், சுற்றுலா, காப்புறுதி, தொழில்நுட்பம் என பலதரப்பட்ட துறைகளைச் சார்ந்த முகப்புகள் இந்த விழாவில் இடம்பெறவுள்ளன.

astro-expo-2017

#TamilSchoolmychoice

எதிர்வரும் 31-ஆம் தேதிக்குள் வியாபார முகப்பிடங்களுக்குப் பதிவு செய்பவர்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படும்.

இவ்விழாவின் வியாபார முகப்பிடங்களின் கட்டண விவரங்கள் பின்வருமாறு:

Plan A – Standard Booth (3m x 3m) RM 5 000.00
Plan B – Premium Booth (6m x 6m)

(பல கூடுதல் வசதிகள் உட்பட)

RM 24 000.00

மேலும், ஆடல் பாடல், கேளிக்கை விளையாட்டு, பிரபலங்களின் சந்திப்பு, உள்ளூர் நட்சத்திரங்களின் வருகை, டி.எச்.ஆர் ராகா மற்றும் மண்ணின் மைந்தர்களின் கலை நிகழ்ச்சி என 4 நாட்களுக்கு இந்நிகழ்வு மிகவும் பிரம்மாண்டமாக கலைகட்டப் போகிறது. ஆர்வமுள்ளவர்கள் http://www.astroulagam.com.my அகப்பக்கத்திற்குச் சென்று இதற்கான மேல் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

ஆகவே, ஆர்வமுள்ளவர்கள் http://www.astroulagam.com.my என்ற  அகப்பக்கத்திற்கு சென்று விவரங்களைப் பெற்றுக்கொள்ளலாம்  அல்லது indiantradeexpo@astro.com.my என்ற மின்னஞ்சல் வாயிலாக  ஏற்பாட்டாளர்களைத் தொடர்பு கொள்ளலாம்.