இலண்டன் – எட்டாண்டுகள் அமெரிக்க அதிபர் பதவியை வகித்து முடித்த பின்னர் பராக் ஒபாமா தற்போது ஜாலியாக உலகம் எங்கும் சுற்றி வருகின்றார். தனது பழைய நண்பர்களைச் சந்திப்பது, தனது ஒபாமா அறவாரியப் பணிகளுக்கான மேற்பார்வை மற்றும் அதற்கான நிதி திரட்டுவது போன்ற அம்சங்களில் ஒபாமா தனது கவனத்தைச் செலுத்தி வருகின்றார்.
தற்போது பிரிட்டனுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் ஒபாமா, நேற்று பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூனைச் சந்தித்து அளவளாவினார். “எனது பழைய நண்பரைச் சந்தித்தேன்” என கெமரூன் தனது டுவிட்டர் பக்கத்தில் மேலே காணும் படத்தைப் பதிவிட்டு மகிழ்ந்திருக்கிறார்.
அதே வேளையில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் இரண்டாவது வாரிசான இளவரசர் ஹாரியும் தனது அரண்மனையில் ஒபாமாவுக்கு வரவேற்பு அளித்து கௌரவித்திருக்கின்றார்.