Home One Line P2 டெங்கியால் பாதிக்கப்பட்ட டோனி பெர்னாண்டஸ் நலம் பெற ஒபாமா வாழ்த்து!

டெங்கியால் பாதிக்கப்பட்ட டோனி பெர்னாண்டஸ் நலம் பெற ஒபாமா வாழ்த்து!

1375
0
SHARE
Ad

வாஷ்ங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் பாராக் ஒபாமா தனது நண்பரும் ஏர் ஏசியா குழுவின் தலைமை நிருவாக அதிகாரியுமான டான்ஸ்ரீ டோனி பெர்னாண்டஸுக்கு டெங்கியிலிருந்து மீண்டு வந்த பிறகு படிப்பதற்காக சில புத்தகங்களை அனுப்பியுள்ளார் என்று டி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று வியாழக்கிழமை மாலை பெர்னாண்டஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஒபாமா அறக்கட்டளை அவருக்கு அனுப்பிய மூன்று புத்தகங்கள் மற்றும் ஓர் அட்டையின் படத்தையும் வெளியிட்டிருந்தார்.

அன்புள்ள டோனி, அதிபர் ஒபாமா அவரது கோடைகால வாசிப்பு பட்டியலிலிருந்து இந்த தேர்வுகளை உங்களுக்காக அனுப்பியுள்ளார். வாழ்த்துக்கள், ஒபாமா அறக்கட்டளை, ” ஒரு வெள்ளை அட்டையில் இச்செய்தி அச்சிடப்பட்டப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

கொல்சன் வைட்ஹெட் எழுதிய தி நிக்கல் பாய்ஸ், டெட் சியாங்கின் சுவாசம் மற்றும் லாரா வில்கின்சன் எழுதிய அமெரிக்க ஸ்பை ஆகியவை புத்தகங்கள்.

என்ன ஒரு நல்ல சிந்தனை. அவற்றைப் படிக்க காத்திருக்கிறேன். அழகான சிந்தனைக்கு நன்றிஎன்று டோனி குறிப்பிட்டுள்ளார்.

பெர்னாண்டஸ் தற்போது எங்கு குணமடைந்து வருகிறார் என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி, அவர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.