Home One Line P2 சுபஶ்ரீ: “அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகும்?”- மக்கள் காட்டம்

சுபஶ்ரீ: “அரசியல்வாதிகளின் சுயநலப்போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகும்?”- மக்கள் காட்டம்

952
0
SHARE
Ad

சென்னை: பெண் பொறியியலாளர் ஒருவர் தனது இருசக்கர வண்டியில் சென்றுக் கொண்டிருக்கும் போது சாலையோரமாக வைக்கப்பட்டிருந்த அரசியல் விளம்பர பதாகை அவர் மீது சாய்ந்தது.

இதனால், கீழே தடுமாறி விழுந்த சுபஶ்ரீ என்று அடையாளம் காணப்பட்ட அப்பெண்ணை பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி மோதியதாகவும்,  உடனடியாக அந்தப் பெண் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார் என்றும் கூறப்படுகிறது

இந்த சம்பவம் சென்னை வாழ் மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்களுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கால் இன்னும் எத்தனை உயிர்கள் இது போல பறிபோகும் எனும் கேள்விகளை மக்கள் சீற்றத்துடன் முன்வைத்து வருகின்றனர்.

#TamilSchoolmychoice

அதிமுக பிரமுகரான ஜெயகோபால், தனது மகன் திருமணத்திற்காக சாலைக்கு இடையில் வைக்கப்பட்டிருந்த அந்த விளம்பர பதாகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோரின் படங்களும் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து சென்னை காவல் துறை கூறியபோது, அந்த பதாகைகள் அங்கீகரிக்கப்படாதவை என்றும், அதனை வைத்தவர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் கூறினார். இந்த சம்பவம் குறித்து அரசியல் தலைவர்கள் பலர் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.