Home One Line P2 அசுரன்: அப்பா, மகன் வேடத்தில் மிரட்டும் தனுஷ்!

அசுரன்: அப்பா, மகன் வேடத்தில் மிரட்டும் தனுஷ்!

1152
0
SHARE
Ad

சென்னை: நடிகர் தனுஷ் நடித்து இரசிகர்களால் எதிர்பார்த்துக் கொண்டிருந்த திரைப்படம் ‘அசுரன்’. இத்திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி அண்மையில் வெளியிடப்பட்டு இரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ், அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முன்னதாக, இவ்விருவரின் கூட்டணியில் வெளிவந்த பொல்லாதவன், ஆடுகளம் மற்றும் வட சென்னை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

இப்படத்தில் தனுஷிற்கு இணையாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். மேலும், அபிராமி, பிரகாஷ் ராஜ், பசுபதி, யோகி பாபு, ஆடுகளம் நரேன், குரு சோமசுந்தரம், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, கென் கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

பூமணி எழுதிய வெக்கைஎனும் நாவலைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிரடி வசனங்கள் மற்றும் காட்சிகள் நிரம்பிய இப்படத்தின் முன்னோட்டக் காணொளியை கீழ்காணும் இணைப்பில் காணலாம்: