Home Video “மனுசி” : அறம் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் புதிய படம்

“மனுசி” : அறம் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் புதிய படம்

407
0
SHARE
Ad

சென்னை : அண்மையில் வெளியிடப்பட்ட ‘மனுசி’ திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களைக் கலக்கி வருகிறது. அண்ட்ரியா ஜெரமியா கதாநாயகியாக நடித்திருப்பது ஒரு ஈர்ப்பு என்றால், முன்னோட்டத்தில் காட்டப்படும் காட்சிகளும் கூர்மையான வசனங்களும் ரசிகர்களைக் கவர்ந்திருக்கும் இன்னொரு ஈர்ப்பு.

மனுசி மீதான எதிர்பார்ப்புக்கு இன்னொரு காரணம் படத்தின் இயக்குநர் கோபி நயினார். நயன்தாரா நடிப்பில் பெரும் வெற்றி பெற்ற அறம் படத்தின் இயக்குநர். பலதரப்பட்ட சமூகப் பிரச்சனைகளை சிறுவன் ஆழ்துளைக் குழிக்குள் விழும் சம்பவத்தின் பின்னணியில் சூடாக விவாதித்த படம் அறம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோபி நயினார் மனுசி படத்தை இயக்கியிருப்பதும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.

படத்தைத் தயாரித்திருப்பவர் பிரபல இயக்குநர் வெற்றி மாறன். இதுவும் திரைப்பட உலகம் இந்தப் படத்தை ஆவலுடன் – ஆர்வத்துடன் – எதிர்பார்க்க இன்னொரு காரணம்!

#TamilSchoolmychoice

மனுசி திரைப்படத்தின் முன்னோட்டத்தை கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: