Home நாடு பெர்சாத்து அல்லது கெராக்கான் கட்சியிலிருந்து மலாய் வேட்பாளர்!

பெர்சாத்து அல்லது கெராக்கான் கட்சியிலிருந்து மலாய் வேட்பாளர்!

138
0
SHARE
Ad

கோலகுபுபாரு : பொதுவாக மலேசிய அரசியலில் சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படாது. மக்களும் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள். அபூர்வமாக எப்போதாவது ஓரிரு இடைத் தேர்தல்கள் பரபரப்புடனும் அதிக எதிர்பார்ப்புடனும் நடைபெறும்.

மலேசியாவின் வெப்பமான நடப்பு அரசியல் சூழலில் கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தல் பல காரணங்களால் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இங்கு போட்டியிடும் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் சார்பில் ஒரு மலாய் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த மலாய் வேட்பாளர் பெர்சாத்து அல்லது கெராக்கான் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்படலாம் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

சுமார் 46 விழுக்காட்டு மலாய் வாக்காளர்களைக் கொண்டிருப்பதால் இங்கு மலாய் வேட்பாளரே பொருத்தமாக இருப்பார் என பெரிக்காத்தான் நேஷனல் தலைமைத்துவம் கருதுகிறது.

பெர்சாத்து சார்பில் உலு சிலாங்கூர் தொகுதி தலைவர் கைருல் அசாரி சாவுட் வேட்பாளராகப் பரிசீலிக்கப்படுகிறார்.

கெராக்கான் சார்பாக, முனிரா அபு பாக்கார் வேட்பாளராகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் முனிரா புக்கிட் லஞ்ஜான் சட்டமன்றத்திற்குப் போட்டியிட்டார்.

ஜசெக வேட்பாளர் யார்?

இதற்கிடையில் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சர் ஙா கோர் மிங்-கின் செயலாளர் பாங் சோங் தாவ் ஜசெக வேட்பாளராக நிறுத்தப்படலாம் என ஊடகங்கள் தெரிவித்தன.

இன்று புதன்கிழமை இரவு (ஏப்ரல் 24) நடைபெறும் ஜசெக நிகழ்ச்சி ஒன்றில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் ஏப்ரல் 27-ஆம் தேதி நடைபெறும். வாக்களிப்பு மே 11-ஆம் நாள் நடைபெறும்.

கடந்த மார்ச் 21-ஆம் தேதி கோலகுபுபாரு சட்டமன்ற உறுப்பினர், 58 வயதான லீ கீ ஹியோங் காலமானதைத் தொடர்ந்து அங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.